மேற்­கிந்­திய டெஸ்ட் தொடரை கைப்­பற்­றுவோம் : மேத்யூஸ் நம்­பிக்கை

மேற்­கிந்­திய தீவுகள் அணிக்கு எதி­ரான டெஸ்ட் தொடரை கைப்­பற்­றுவோம் என்று இலங்கை அணித்­த­லைவர் மேத்யூஸ் நம்­பிக்கை தெரி­வித்­துள்ளார்.

மேற்­கிந்­திய தீவுகள் அணி இலங்­கைக்கு சுற்­றுப்­ப­யணம் மேற்­கொண்டு 2 டெஸ்ட் போட்­டிகள் கொண்ட தொடரில் விளை­யாடி வரு­கி­றது.

கலேவெலயில் நடந்த முதல் டெஸ்ட் போட்­டியில் இலங்கை இன்னிங்ஸ் மற்றும் 6 ஓட்­டங்­களால் அபார வெற்றி பெற்று அசத்­தி­யது.

இந்­நி­லையில் எதிர்­வரும் 22ஆம் திகதி இவ்­விரு அணி­க­ளுக்கு இடை­யே­யான 2ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொழும்பில் நடக்­கி­றது.

காதலிக்காக அணி மாறிய தாஹிர்

தென்­னா­பி­ரிக்க கிரிக்கெட் அணியில் இடம் பெற்று சுழற்­பந்து வீச்சில் கலக்கி வரும் இம்ரான் தாஹிர், பாகிஸ்­தானை சேர்ந்­தவர். இந்­திய வம்­சா­வளி பெண்ணை காத­லித்து மணந்து கொண்ட இம்ரான் தாஹிர், பின்னர் தென்­னாபி­ரிக்க அணியில் இடம் பெற்றார்.

1979ஆ-ம் ஆண்டு பாகிஸ்­தானில் உள்ள லாகூரில் பிறந்த இம்ரான் தாஹி­ருக்கு தற்­போது 36 வய­தா­கி­றது.  1998ஆ-ம் ஆண்டு பாகிஸ்தான்
'ஏ' அணியில் இடம் பெற்­றி­ருந்த தாஹிர், தென்­னா­பி­ரிக்க சுற்­றுப்­ப­யணம் மேற்­கொண்­டி­ருந்த அணியில் இடம் பெற்­றி­ருந்தார்.

அன்று சங்கா - மஹேல ஜோடி : இன்று திமுத் - சந்திமால் ஜோடி

மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் மூன்றாவது விக்கெட்டுக்காக இணைந்து கொண்ட திமுத் கருணாரட்ன, தினேஷ் சந்திமால் ஜோடி 228 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டனர்.  

இதன் மூலம் அவ்வணிக்கு  எதிராக  அதிகூடிய மூன்றாவது விக்கெட்டுக்கான இணைப்பாட்ட சாதனையை நிலைநாட்டியுள்ளனர்.
முன்னதாக  நட்சத்திர வீரர்களான மஹேல ஜயவர்தன மற்றும் குமார் சங்கக்கார ஜோடி 2001ஆம் ஆண்டு நவம்பர் மாதம் காலியில் நடைபெற்ற  மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியில் 162 ஓட்டங்களைப் பெற்றமையே அதிகூடிய இணைப்பாட்டமாக இருந்தது. 

ஷாங்காய் டென்னிஸ் : பெடரர் தோல்வி

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி சீனாவில் நடந்து வரு­கி­றது. இதன் ஆண்கள் ஒற்­றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தர வரி­சையில் 3-வது இடத்தில் இருக்கும் ரோஜர் பெடரர் (சுவிட்­சர்­லாந்து), தர வரி­சையில் 70-வது இடத்தில் உள்ள ஸ்பெயின் வீரர் ஆல்பர்ட் ராமோஸ்சை சந்­தித்தார். 

இதில் பெடரர் 6-7 : 4-7, 6-2 : 3-6 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளி­யே­றினார்.

 

டோனிக்கு ஆத­ரவு : முன்னாள் இந்­திய ஜாம்­பவான் கவாஸ்கர்

இந்­திய அணித்­த­லைவர் டோனிக்கு முன்னாள் இந்­திய ஜாம்­பவான் கவாஸ்கர் ஆத­ரவு தெரி­வித்­துள்ளார்.

தென் ஆ­பி­ரிக்­கா­வுக்கு எதி­ரான முதல் ஒருநாள் போட்­டியில் இந்­திய அணி தோற்­றதால் அணித்­த­லைவர் டோனி மீது விமர்ச­னங்கள் எழுந்­தன.

இந்­திய அணியில் டோனியின் இடம் பற்­றியும், அவ­ரது தலைவர் பதவி பற்­றியும் பரி­சீ­லிக்க வேண்டும் என்றும் பலரும் குற்றம் சாட்­டினர்.

குத்­துச்­சண்­டையில் வெற்றி விஜேந்தர் சிங் மகிழ்ச்சி

தொழில்­முறை குத்­துச்­சண்டை போட்­டியில் தான் கலந்­து­கொண்ட முதல் ஆட்­டத்தில் வெற்றி பெற்­றது குறித்து விஜேந்தர் சிங் மகிழ்ச்சி தெரி­வித்­துள்ளார்.

இந்­தி­யாவின் முன்­னணி குத்துச் சண்டை வீர­ரான விஜேந்தர் சிங், தொழில்­முறை குத்­துச்­சண்டை போட்­டியில் நேற்று முன்­தினம் முதல் முறை யாக களம் இறங் கினார்.

‘மூன்றாம் உலகப் போர்’ என்ற பெயரில் நடந்த இப்போட் டியில் பிரிட்­டனின் சோனி ஒயிட் டிங்கை சந்­தித்த அவர் நொக் அவுட் முறையில் வெற்றி பெற்றார்.

மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை கிரிக்கெட் பயிற்சிப் போட்டி சமநிலையில்

மேற்­கிந்­தியத் தீவுகள் கிரிக்கெட் அணி இலங்­கையில் சுற்­றுப்­ப­யணம் மேற்­கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் இரண்டு டி20 போட்­டி­களில் விளை­யா­டு­கி­றது. முதல் டெஸ்ட் தொடர் எதிர்­வரும் 14ம் திகதி தொடங்­கு­கி­றது.

இதற்கு முன்­ன­தாக 3 நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்­டத்தில் இலங்கை கிரிக்கெட் வாரி­யத்­த­லைவர் லெவன் -மேற்­கிந்­திய தீவுகள் அணிகள் விளை­யா­டி­யது.

இதில் முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய மேற்­கிந்­திய தீவுகள் அணி முதல் இன்­னிங்சில் 209 ஓட்­டங்­களில் சுருண்­டது. இலங்கை அணி சார்பில் ரந்தீவ் ஐந்து விக்­கெட்­டுக்கள் வீழ்த்­தினார்.

அமெரிக்காவில் இணையும் சச்சின், சங்கக்கார...!

அமெ­ரிக்­காவில் நடக்க­வுள்ள கண்­காட்சி டி20 கிரிக்கெட் போட்­டியில் சச்சின், வார்னே, சங்­கக்­கார உள்­ளிட்ட முன்னாள் வீரர்கள் விளை­யாட உள்­ளனர்.

அமெ­ரிக்­காவில் கிரிக்­கெட்டை பிர­ப­லப்­ப­டுத்தும் முயற்­சிகள் நடந்து வரு­கின்­றன. இதன் ஒரு பகு­தி­யாக இந்­திய ஜாம்­பவான் சச்சின், அவுஸ்­தி­ரே­லிய முன்னாள் சுழல் ஜாம்­பவான் வார்னே உள்­ளிட்டோர் பங்­கேற்கும் போட்­டிகள் நடக்­கி­றது.

இந்தப் போட்­டியில் கங்­குலி, லட்­சுமண், வாசிம் அக்ரம், பிரையன் லாரா, காலிஸ், சங்­கக்­கார உள்­ளிட்ட பல வீரர்கள் விளை­யா­டு­கின்­றனர்.

கடைசி ஒருநாள் போட்டியில் அசத்தல் : தொடரை வென்றது பாகிஸ்தான் அணி

5 விக்கெட் வீழ்த்­திய பிலால் ஆசிப்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சிம்­பாப்­வேயில் சுற்­றுப்­ப­யணம் செய்து விளை­யா­டியது.

இரு அணிகள் இடை­யே­யான 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் முதல் ஆட்­டத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்­றது.

2வது ஆட்­டத்தின் போது மழை குறுக்­கிட்­டதால் டக்வொர்த் லீவிஸ் விதிப்­படி சிம்­பாப்வே வெற்றி பெற்­ற­தாக அறி­விக்­கப்­பட்­டது.

இந்­நி­லையில் கடைசி போட்டி நேற்று முன்தினம் ஹரா­ரேயில் நடை­பெற்­றது. முதலில் பேட் செய்த சிம்­பாப்வே அணி 38.5 ஓவரில் 161 ஒட்டங்களுக்கு சுருண்­டது.

இலங்கை கால்பந்தாட்ட அபிவிருத்திக்கு உதவுவதாக ஃபீஃபா தலைவர் செப் பிளட்டர் மீண்டும் உறுதி

இலங்கை கால்­பந்­தாட்ட அபி­வி­ருத்திப் பணி­க­ளுக்கு தொடர்ந்து உத­வு­வ­தாக சர்­வ­தேச கால்­பந்­தாட்ட சங்­கங்­களின் சம்­மே­ளனத் (ஃபீஃபா) செப் ப்ளட்டர் உறுதி வழங்­கி­யுள்ளார்.

இலங்கை கால்­பந்­தாட்ட சம்­மே­ளனத் தலைவர் அநுர டி சில்வா, முன்னாள் தலைவர் ரஞ்சித் ரொட்­றிகோ ஆகியோர் சூரிச் நக­ரி­லுள்ள சர்­வ­தேச கால்­பந்­தாட்ட சங்­கங்­களின் சம்­மே­ளனத் தலை­மை­ய­கத்தில் வைத்து செப் பிளட்டர் சந்­தித்­த­போது அவர் இந்த உறு­தியை வழங்­கி­யுள்ளார்.

Pages

Subscribe to Virakesari Sports RSS