Atheletic

சாதிப்பாரா உசைன் போல்ட்?

அதிவேகமாக ஓடும் ஓட்டப்பந்தய வீரரான உசேன் போல்ட் சுவிட்சர்லாந்தில் நடக்கும் போட்டியில் மீண்டும் உலக சாதனை படைப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சுவிட்சர்லாந்தின் லாசன்னேவில் 'அத்லெட்டிஸ்மா டைமண்ட் லீக்’ போட்டிகள் எதிர்வரும் ஜூலை 9-ம் திகதி நடைபெறவுள்ளது.

இதில் நான்காவது முறையாக 200 மீற்றர் போட்டியில் பங்கேற்பதை அதிவேக ஓட்டக்காரர் உசேன் போல்ட் உறுதி செய்துள்ளார்.

இவர் கடந்த 2012-ம் ஆண்டு இதே போட்டியின் போதுதான் 200 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் உலகின் அதிவிரைவான ஓட்டமாக 19.58 நொடிகள் என்ற உலக சாதனையைப் படைத்தார்.

ஒலிம்பிக் விழாவுக்கான மனு கோரல்களில் புதிய முறையை அறிமுகப்படுத்த ஆராய்வு

 

இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுநர் சங்கம் நடத்தப்படும் சேர் ஜோன் டார்பர்ட் கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகள்

இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுநர் சங்கம் நடத்தப்படும் சேர் ஜோன் டார்பர்ட் கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளின் மூன்றாம் நாள் மேலும் இரண்டு சாதனைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
பெலியத்தை மகாவலி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றுவரும் இப் போட்டிகளின் மூன்றாம் நாளான நேற்றைய தினம் தெபரவௌ தேசிய பாடசாலையைச் சேர்ந்த நெத்மி மேகாவர்ண 14 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான நீளம் பாய்தலில் 5.38 மீற்றர் தூரம் பாய்ந்து புதிய சாதனையை நிலைநாட்டினார். 
குருநாகல் மலியதேவ மகளிர் கல்லூரியைச் சேர்ந்த பீ. சமரதுங்கவினால் கடந்த வருடம் ஏற்படுத்தப்பட்ட 5.14 மீற்றர் என்ற சாதனையையே நெத்மி நேற்று முறியடித்தார்.

யாழ். இந்து மெய்வல்லுநர் ஜவருல்லாவின் 42வருட நீளம் பாய்தல் சாதனை முறியடிப்பு

எம்பிலிப்பிட்டியில் நடைபெற்றுவரும் சேர் ஜோன் டார்பர் கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளில் இரத்தினபுரி சீவலி மத்திய கல்லூரியைச் சேர்ந்த சமோத் சன்ச்சித்த, 14 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான நீளம் பாய்தலில் திங்களன்ற புதிய சாதனை நிலைநாட்டினார்.
இவர் இந் நிகழ்ச்சியில் 6.03 மீற்றர் தூரம் பாய்ந்து 42 வருடங்களுக்கு முன்னர் நிலைநாட்டப்பட்டிருந்த 5.94 மீற்றர் என்ற சாதனையை முறியடித்தார்.
யாழ். இந்து கல்லூரி சார்பாக 1972இல் ஏ. எச். எம். ஜவ்றுல்லா என்பவரே 5.94 மீற்றர் என்ற சாதனையை ஏற்படுத்தியிருந்தவராவார்.

பரிதி வட்டம் எறிதல் போட்டியில் ஹார்ட்லி வீரர் ஆனந்த சாதனை

(நெவில் அன்தனி)
எம்பிலிப்பிட்டி மகாவலி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றுவரும் றிட்ஸ்பறி சேர் ஜோன் டார்பர்ட் கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளில் பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரியைச் சேர்ந்த பாலச்சந்திரன் ஆனந்த் 14 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான பரிதி வட்டம் எறிதலில் புதிய சாதனை நிலைநாட்டியுள்ளார்.
இவர் பரிதியை 37.33 மீற்றர் தூரம் எறிந்து புதிய சாதனையை நிலைநாட்டி தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.
கொட்டாஞ்சேனை புனித ஆசீர்வாதப்பர் கல்லூரியைச் சேர்ந்த எம். எச். எஸ். டி திசோரா 2008இல் நிலைநாட்டிய 29.17 மீற்றர் என்ற சாதனையையே ஆனந்த் முறியடித்துள்ளார்.

மெய்வல்லுநர் போட்டி

தியகம மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விளையாட்டரங்கில் ஞாயிறன்று ஆரம்பமான சேர் ஜொன் டார்பர் கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளில் விசாகா மகளிர் வித்தியாலயத்தின் சானுகா அத்தப்பத்த புதிய சாதனை ஒன்றை நிலைநாட்டினார்.
15 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான பரிதி வட்டம் எறிதல் போட்டியில் பரிதியை 31.57 மீற்றர் தூரம் எறிந்து சானுகா புதிய சாதனையை நிலைநாட்டினார். இதன் மூலம் வீரபொக்குன, ஹிரிபொக்கன கனிஷ்ட பாடசாலையின் அயேஷா டில்ருக்ஷிக்கு 11 வருடங்களாக சொந்தமாகவிருந்து 31.29 மீற்றர் என்ற பழைய சாதனை புதுப்பிக்கப்பட்டுள்ளது.

Subscribe to RSS - Atheletic