காதலிக்காக அணி மாறிய தாஹிர்

தென்­னா­பி­ரிக்க கிரிக்கெட் அணியில் இடம் பெற்று சுழற்­பந்து வீச்சில் கலக்கி வரும் இம்ரான் தாஹிர், பாகிஸ்­தானை சேர்ந்­தவர். இந்­திய வம்­சா­வளி பெண்ணை காத­லித்து மணந்து கொண்ட இம்ரான் தாஹிர், பின்னர் தென்­னாபி­ரிக்க அணியில் இடம் பெற்றார்.

1979ஆ-ம் ஆண்டு பாகிஸ்­தானில் உள்ள லாகூரில் பிறந்த இம்ரான் தாஹி­ருக்கு தற்­போது 36 வய­தா­கி­றது.  1998ஆ-ம் ஆண்டு பாகிஸ்தான்
'ஏ' அணியில் இடம் பெற்­றி­ருந்த தாஹிர், தென்­னா­பி­ரிக்க சுற்­றுப்­ப­யணம் மேற்­கொண்­டி­ருந்த அணியில் இடம் பெற்­றி­ருந்தார்.

அப்­போது சுமையா தில்தர் என்ற இந்­திய வம்­சா­வளி பெண்ணை சந்­தித்­துள்ளார். இரு­வ­ருக்கும் காதல் மலர்ந்­தது. 

தொடர்ந்து இம்ரான் தாஹிர்  சுமை­யாவை திரு­மணம் செய்து கொண்டார்.  

பின்னர் தென்­னா­பி­ரிக்­காவில் குடி­யே­றினார். 2011ஆ-ம் ஆண்டு தென்­னா­பி­ரிக்க அணியில் இம்ரான் தாஹிருக்கு இடம் கிடைத்தது.