குத்­துச்­சண்­டையில் வெற்றி விஜேந்தர் சிங் மகிழ்ச்சி

தொழில்­முறை குத்­துச்­சண்டை போட்­டியில் தான் கலந்­து­கொண்ட முதல் ஆட்­டத்தில் வெற்றி பெற்­றது குறித்து விஜேந்தர் சிங் மகிழ்ச்சி தெரி­வித்­துள்ளார்.

இந்­தி­யாவின் முன்­னணி குத்துச் சண்டை வீர­ரான விஜேந்தர் சிங், தொழில்­முறை குத்­துச்­சண்டை போட்­டியில் நேற்று முன்­தினம் முதல் முறை யாக களம் இறங் கினார்.

‘மூன்றாம் உலகப் போர்’ என்ற பெயரில் நடந்த இப்போட் டியில் பிரிட்­டனின் சோனி ஒயிட் டிங்கை சந்­தித்த அவர் நொக் அவுட் முறையில் வெற்றி பெற்றார்.

இது­கு­றித்து நேற்று நிருபர் களிடம் கூறிய அவர், “பொது­வாக நான் பதட்­டப்­பட மாட்டேன். ஆனால் கோடிக்­க­ணக்­கான இந்­தி­யர்கள் இந்தப் போட்­டியை கவ­னித்­துக்­கொண்­டி­ருப்­பார்கள் என்­பதால் இந்தப் போட்­டியில் நான் கொஞ்சம் பதட்­ட­மாக இருந்தேன்.

இந்த வெற்றி மகிழ்ச்­சி­ய­ளிப்­ப­தாக உள்­ளது.